மண்ணில் இருக்கும் சகுனம் பார்த்தலும்

 வீடு கட்டுவதற்கு மனையை தேர்ந்தெடுக்கும்போது நம் பொருளாதார வசதிக்கேற்ப நாம் எதிர்பார்க்கும் வசதிகள் கேட்ப நம்மால் அங்கு வீடு கட்ட முடியும் என்பதை மட்டும் ஆராய்ந்தால் போதாது. அந்த மனை யானது எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

மனையின் கிழக்கு திசையும் வடக்குத் திசையும் தாங்கியிருக்க வேண்டும். அதேபோல் மனையின் தெற்கு பக்கம் மேற்கு பக்கம் உயர்ந்து இருக்க வேண்டும். அதுவே நல்ல மனை. அத்தையை மனையில் வீடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வியாபாரம் விருத்தியாகும் புத்திரவிருத்தி உண்டாகும் செல்வம் சேரும் வாழ்க்கை வெற்றி கிடைக்கும்.

அடுத்தபடியாக மனையின் சந்திர ஸ்தானத்தையும் சூரிய ஸ்தானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை எவ்வாறு தெரிந்து கொள்வது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கப் படத்தை கவனியுங்கள்.



சந்திர ஸ்தானம் சூரிய ஸ்தானமும் மனையின் தெற்கு பகுதியில் மேற்குப் பகுதியும் இணைந்து உருவாகும் முக்கோண பகுதியானது சந்திர ஸ்தானம் எனப்படும் மனையின் கிழக்குப் பகுதியும் வடக்குப் பகுதியில் இருந்து உருவாகும் முக்கோண பகுதியானது சூரிய ஸ்தானம் எனப்படும்.

அவற்றில் சந்திர ஸ்தலம் உயர்ந்து சூரிய ஸ்தலம் தாழ்ந்தும் அமைந்திருக்க வேண்டும். அதுவே நல்ல மனையின் அமைப்பாகும். அத்தகைய  மனையில் வீடு கட்டினால் எல்லா வகையான அதிர்ஷ்டங்களும் பெறலாம் மனையில் சூரிய ஸ்தலம் உயரத்து சந்திரன் தாழ்ந்து தாழ்ந்து இருக்கும் ஆனால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்கள் துன்பப்படுவார்கள்நோய் தொல்லை கொடுக்கும். வழக்குகள் கவலையும் வீண் செலவையும் உண்டாக்கும். கௌரவமும் புகழும் நாணயமும் பாதிக்கப்படும்.

மனையின் இரண்டு ஸ்தானங்களும் சமமான நிலையில் அமைந்திருக்கும் ஆனால் இங்கு வீடு கட்டுபவர்களுக்கு வெற்றியும் இல்லாத தோல்வியும் இல்லாத வாழ்க்கை அமையும். வாழ்வில் இன்பமும் துன்பமும் சமமாக வரும். மனையின் நான்கு பக்கங்களும் உயர்ந்தும் நடுப்பக்கம் மட்டும் பலமாக அமைந்திருந்தால் அங்கு வீடு கட்டுபவர்கள் தொடர்ந்து வியாதிகளால் பாதிக்கப்படுவார்கள்.

மனையின் தெற்கு பகுதி மட்டும் உயர்ந்து மற்ற மூன்று பகுதிகளும் தாழ்ந்து அமைந்திருந்தால் அங்கு வீடு வாழ்பவர்கள் தீமையான பலன்களே நடைபெறும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெறலாம்.

மனை நான்கு பக்கங்களும் தாழ்வாகவும் நடுப்பக்கம் மட்டும் இருந்திருந்தால் அங்கு வீடு குத்திய வாழ்வும் நீ வாழ்க்கையில் அடிக்கடி தடைகள் தோன்றும். அவை அவர்களுடைய முன்னேற்றத்தை தடுக்கும்.

சிலவகை மனைகள் சிலவகை பிரிவினர்களுக்கு ராசி நிறைந்தவையாக அமைகின்றன. உதாரணத்திற்கு சதுப்புநில பூமி,தாமரை குளத்தில் மனம் கொண்ட பூமி,வெளிர்நிற பூமி ஆகியவை பிராமணர்களுக்கே உரியவையாகும். அவை அவர்களுக்கு மட்டும் நன்மை கொடுக்கும்.

துவர்ப்பான பூமி,தொழுவ வாடை கொண்ட பூமி,சிவந்த நிற பூமி ஆகியவை மன்னர்களுக்கு உரியவையாகும். அவை அவர்களுக்கு மட்டுமே நன்மையான பலன்களை கொடுக்கும்.

விளைநில பூமி,நீர்த்தன்மை மிகுந்த மனை,கருப்பு நிற பூமி ஆகியவை வைசிய அவருக்கு உரியவையாகும். அவை அவர்களுக்கு மட்டுமே நன்மையான பலன்களைக் கொடுக்கும்.

காடு போல் காணப்படும் பூமி பச்சை நிற பூமி ஆகியவை மற்ற பிரிவினருக்கு உரியவையாகும். அவை அவர்களுக்கு மட்டுமே நன்மையான பலன்களை கொடுக்கும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனையடி சாஸ்திரம்