மனையடி சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம் என்பது ஜோதிட சாஸ்திரம் போலவே ஓர் அரிய கலையாகும்.அதில் பல ஆச்சரியமுட்டும் ௨ண்மைகள் ௨ள்ளன.
ஆனால் மனையடி சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரம் போல் கொண்டாடப்படுவதில்லை.ஓரு பெண்ணுக்கும் ஓரு ஆணுக்கும் திருமணம் செய்ய நினைத்தால் முதலில் ஜோதிட சாஸ்திரத்தின் துணையைத்தான் தேடுகிறார்கள்.
பெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் இருக்கிறதா, அவர்களுடைய மணவாழ்க்கை எவ்வாறு இருக்கும், பெண்ணிண் மாங்கல்ய பலம் எப்படி இருக்கும், அவர்கள் சீரும் செல்வத்துடண் வாழ்வார்களா,அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும் போன்ற விவரங்கள் ஓரு ஜோதிடரிமிருந்து தெரிந்து கொள்கிறார்கள்.
பெண்ணுக்கும் பையனுக்கும் நல்ல பொருத்தம் இருந்தால் தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பொருத்தம் இல்லை என்றால் பெரும்பாலும் திருமணம் நிச்சயிக்கப்படவில்லை.
ஆனால் வீடு கட்ட நினைப்பவர்கள் அவ்வாறு மனையடி சாஸ்திரத்தையும் நாடுவதில்லை அவர்கள் இன்ஜினியரிங் அல்லது அனுபவம் மிகுந்த மைத்திரியும் நாடிச் செல்கிறார்கள். வீட்டைக் கட்டுவதை பற்றி அவரிடம் தீவிரமாக ஆலோசனை செய்கிறார்கள்.
ஒருவர் தேவையான பணத்தை கையில் வைத்துக்கொண்டு வீட்டை கட்ட தொடங்குகிறார்கள். ஆனால் அவரால் வீட்டை கட்டி முடிக்க முடிவதில்லை. அதை பாதியிலேயே நின்று போய் விடுகிறது.
ஆனால் மற்றொருவர் கையில் சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு எப்படியாவது சமாளித்து விடலாம் என்று குருட்டு தைரியத்தில் வீட்டை கட்ட தொடங்குகிறார். இந்த வீடு எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலத்தில் கட்டப்படுகிறது.
இந்த அவலநிலையை போக்குவதற்கு வீடு கட்ட நினைக்கும்போது மனையடி சாஸ்திரத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம்.அதற்கு முதலில் மன்னடி சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.
ஒருவன் சொந்த வீடு கட்டி இதிலிருந்து சொத்துக்கு மேல் சொத்து சேர்த்து பல லட்சங்களுக்கு அதிபதி ஆகி விடுகிறார். மற்றொருவர் சொந்த வீடு கட்டி அதில் இருந்து ஒவ்வொரு சொத்தாக வைத்து கடைசியில் சொந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டுக்கு குடித்தனம் செல்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக